விந்தையான விண்வெளி 6 th sense scientific: பூமியைத் தாக்கும் விண்கற்கள்

பூமியைத் தாக்கும் விண்கற்கள்

Posted by irsa


அமெரிக்காவில் அரிசேனா மாகாணத்தில் டெட்ரிஃபைய்ட் ஃபாரஸ்ட் என்னும் பாலைவனத்திற்கு சற்று தொலைவில், பாரிஸ்கர் கிடாரப் பள்ளம் என்ற ஒரு பள்ளம். அதன் குறுக்களவு முக்கால் மைல், ஆழம் 600 அடி என்ற அளவில் இன்றைக்கும் இருக்கிறது.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு விண் கல் ஒன்று விழுந்த வடுதான் அந்தப் பள்ளம். இது மாதிரி எத்தனையோ பள்ளங்கள் பூமியின் மீது காணப்பட்டாலும், அது உருவான விதம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள முயற்சிக்காததால் பள்ளம் வந்த விதம் பற்றிய விவரங்கள் நம்மால் அறியப்படாமல் இருக்கிறது.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 6 மைல் அகலமுள்ள K-T என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கல் மெக்ஸ்கோவின் யுகடான் தீவகற்பத்தில் (Yucatan Peninsula) விழுந்தது. அந்த அதிர்ச்சி ஆட்டத்தில் “கனற்புயல்” (Firestorm) எழுந்து தீமயக் குப்பைகள் உண்டாயின. அவை மீண்டும் பூதளத்தைத் தொட்டு தீக்காடுகளில் பெரும் புகை மண்டலம் கிளம்பி பல உயிரினங்கள் மூச்சு முட்டிச் செத்தன ! உதாரணமாக 1908 இல் சைபீரியாவில் ஏற்பட்ட காற்று வெடிப்பில் 1300 சதுர மைல்களில் 60 மில்லியன் மரங்கள் விழுந்தன ! ஆறு மைல் அகலமுள்ள ஒரு விண்கல் பெரும் நகர மையத்திலே விழுந்தால் என்ன நிகழும் என்பதைக் கற்பனை செய்ய இயலாது !

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரும் விண்குன்று (6-60 மைல் ?) பூமியின் மீது விழுந்து அப்போது உலவிய டைனோ சாரஸ் விலங்கினம் எல்லாம் செத்துப் புதைந்து போயின ! 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறைத் தாக்குவதாய் எதிர்பார்க்கும் 300 அடி அகலமுள்ள ஒரு விண்கல் பூமியை மோதினால் அது 20 மெகாடன் டியென்டி வெடிப்பு விளைவுகளை உண்டாக்கும், அதைவிட அரை மைல் அகற்சியுள்ள ஒரு பெரும் விண்பாறை பூமியைத் தாக்கினால் 20,000 மெகாடன் டியென்டி வெடிப்புச் சேதாரங்கள் விளையுமாம். நாசா விஞ்ஞானிகள் நியூ மெக்ஸிகோ தளத்தில் விண்கற்களை உளவும் “லீனியர் திட்டங்களை” (LINEAR - Lincoln Near Earth Asteroid Research Program) அமைத்து, 0.6 மைல் அகல விண்பாறை எதுவும் பூமிக்கு அருகில் வருகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் ! அதன்படி 1995 ஆம் ஆண்டில் 0.6 மைல் அளவுள்ள பனிரெண்டு விண்பாறைகள் விண்வெளியில் அறியப்பட்டன !

விண்கற்கள் ஆங்கிலத்தில் 'Meteorites' என்று அழைக்கப் படுகின்றன. இந்த விண்கற்களில் பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் சுற்றுகின்றன. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அண்டக் கோளங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விண்கற்கள்
சிதறியிருக்கலாம்.

விண்கோள்களிலிருந்து சிதறிய அல்லது விண்கோள்களின் ஈர்ப்பு ஆற்றலில் இழுத்துக்கொள்ளப்படாத அண்டவெளித் துண்டுகளாக விண்கற்கள் விண்வெளியில் வீசப்பட்டிருக்கலாம் என்று பல மாதிரியான கருத்துகள் உள்ளன. பூமியில் விழுந்த பெரும்பான்மையான விண்கற்களில் இரும்பு, நிக்கல், உலோகக் கலவை இருப்பது அறியப்பட்டது. இவை பெரும்பாலும் கடினமான பாறை மற்றும் உலோகங்களால் உண்டானவை. புவியீர்ப்பு சக்தி இல்லாததால், அவற்றால் மற்ற விண்கற்களையோ அல்லது மற்ற கிரகங்களையோ ஈர்க்க முடிவதில்லை.

விண்வெளியில் இருக்கும் போது, இது விண்கற்கள் என அழைக்கப்படுகின்றன. பூமியில் விழும் போது, காற்று மண்டலத்தின் வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது 'எரி நட்சத்திரம்' என அழைக்கப்படுகின்றன. இவை முழுமையாக எரிந்து காற்று மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியில் விழுந்து பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

விண்கற்கள் அடிக்கடி பூமி நோக்கி விழும் விந்தைக் கண்காட்சி ஓர் அபாயகரமான அண்டவெளி நிகழ்ச்சி! இரவு நேரங்களில் விண்வெளியில் காணப்படும் ஒளிமய வீச்சுகள் விண்கற்கள் பொழிவைக் காட்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 பவுண்டுஎடையுள்ள 3 அல்லது 4 விண்கற்கள் பூமியை நோக்கிப் பாய்கின்றன. பூமிக்குக் கவசக் குடையாய்க் கடவுள்அமைத்துள்ள வாயு மண்டல உராய்வில், வேகமாய்ப் பாயும் விண்கற்கள் சிதறி, முழுவதும் அல்லது ஓரளவு எரிந்து சாம்பலாய் போய்விடும். அந்த அழிவில் தப்பி, பூமியில் விழுந்த பல விண்கற்கள் உலகில் கண்டெடுக்கப்பட்டுக் கண்காட்சி சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையில் சுற்றும் சில கற்கள், அதன்சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் அருகில் நகருகின்றன. இவ்வாறு நுழையும் கற்கள், பூமியின் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றன. சுமார் 200 மீட்டர் விட்டமுள்ள ஒரு கல், கடலில் விழுவதாக வைத்தாலும், அது ஆழிப் பேரலைகளை (சுனாமி) உருவாக்கும். சுமார் 1 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஒரு கல் எழுப்பும் புகை மண்டலம் இந்த பூமியில் சுமார் 1 வருடம் சூரிய ஒளி படாமல் வைக்கும். இதன் காரணமாக பூமியில் குளிர் அதிகரிக்கும். உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அவ்வாறு பூமியைத் தாக்கிய விண்கற்களால்தான் நம் முன்னோர்களான 'டைனோசர்ஸ்' இனம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூண்டோடு அழிந்தன.

அந்த சம்பவத்தில் பூமியில் பல கால நிலை மாற்றங்கள் நிகழ்ந்தன. குளிர்ந்த பகுதிகள் சூடாகவும், சூடான பகுதிகள் குளிர்ந்த பகுதியாகவும் மாறின. நூறு ஆண்டுக்கு ஒரு முறை 4000 டன் எடையுள்ள விண்கல் ஒன்று பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.1908ஆம் ஆண்டு, ஜூன் 30இல் பூதள விஞ்ஞானிகளால் சுமார் 70 மீட்டர் விட்டமிருக்கும் என்று கணிக்கப்பட்ட ஒரு கல், 1000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சைபீரியன் காட்டை அழித்தது. அதுவும் இந்த கல் பூமியில் மோதவில்லை. மாறாக, அது பூமியை நோக்கி பயணித்த வழியில் பூமியிலிருந்து 5 கிலோமீட்டர் உயரத்தில் சைபீரியன் காட்டின் மேல் வெடித்தது. 30 கிலோமீட்டர் சதுர காடுகள் அழிந்தன.

மரங்கள் சட்டென்று ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகின. 14 கிலோமீட்டர் வரை மரங்கள் "ஒரு பக்கத்தில்" நீர் உரிஞ்சப்பட்டு வற்றின. 80 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்தவர்கள் இறந்தனர். இது அனைத்தும் இந்தக் கல் ஆவியாகக் கூடிய பொருளால் ஆனது. அதுவே பாறையாக இருந்திருந்தால்....?? இவ்வாறு பல சம்பவங்கள் நம் பூமியில் நிகழ்ந்திருக்கின்றன. அண்ட வெளியிலேயே மிகப் பெரிய விண்கல்லாக கருதப்படுவது ஜூன் 4, 2002-இல் கண்டுபிடிக்கப்பட்ட "Quaoar" ஆகும்.

இதன் விட்டம் 1,200 கி.மீட்டர் ஆகும். நம் பூமியின் பத்தில் ஒரு பகுதி விட்டம் கொண்டது என்று பூதள விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு காட்டுகிறது. அது சூரியனை 6 பில்லியன் கிலோ மீட்டர் சுற்றுகிறது. அது சூரியனை சுற்றிவர பூமியின் 286 வருடங்கள் ஆகிறது. இது பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளால் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


விண் கற்கள் தினந்தோறும் பூமியை நோக்கி வந்தபடியே இருக்கின்றன. சில விண் கற்கள் பூமியின்மீது விழுந்து வடுக்களை ஏற்படுத்துவதுடன் வெடித்துச் சிதறி சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. 1908 ஆம் ஆண்டில் மிகப் பெரிய விண் கல் ஒன்று சைபீரியாவில் வந்து விழுந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெரிய பெரிய மரங்கள் பிடுங்கி எறியப்பட்டு, ரெயின்டியர் எனற மான் மந்தை ஒன்று முழுவதுமாக அழிந்தொழிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வெடிப்பினால் ஏற்பட்ட அழுத்த அலை சுமார் சுமார் 3000 மைல்களுக்கு அப்பால் இருக்கக் கூடிய இங்கிலாந்து நாட்டை அதிர வைத்ததாக சில அறிவியல் நூல்கள் குறிப்பிடுகிறது.

இந்நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் விஞ்ஙானிகள் மத்தியில் இக்கற்கள் பெரும் ஆய்வுக்கு உட்படுத்தப்ப்டடு இதன் தொற்றுவாய் என்ன? எங்கிருந்து வருகிறது என்பதில் கவனம் செலுத்தி ஆய்வுகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர். விண் கற்களில் இரண்டு வகையான கற்கள். மண் பொருளான கற்களாகவும், மற்றவை உலோகப் பொருள்களால் ஆனவையாகவும் இருக்கின்றன.




ஒரு காலத்தில் திரவ நிலையிலிருந்து பின்பு அது இறுகி உறுதிப்படுத்தப்பட உலோகப் பொருட்களில் உருவாகியிருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். சூரிய மண்டலத்தின் உருவாக்கத்தில் இடம் பெறப்பட்ட இந்தப் பொருட்கள் கிரகங்களின் உள்ளார்ந்த உலோகப் பொருட்களின் பகுதியாக இருந்து, பின்பு அது உடைந்து சிதறிய நிலையில் விண்வெளியில் சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் வரிசையில் இதுவும் இடம் பெற்று இன்றளவும் சுற்றி வரும் நிகழ்வு நடந்து கொண்டுதானிருக்கிறது. (செவ்வாய் கோளுக்கும், வியாழன் கோளுக்கும் நடுவே ஒரு கோள் உடைந்து நொறுங்கி இன்றளவும் சுற்றிவரும் நிகழ்ச்சியை பார்க்க முடியும்)

சூரிய மண்டலம் உருவாக்கம் பெறப்பட்ட முதல் தளத்திலேயே இது மாதிரியான விண் கற்கள் மற்றும் தூகப்படலம் உருவாக்கம் பெற்று, அவைகள் ஒழுங்குமுறை தவிர்த்த சுழற்சியின் மூலம் விண் பொருள் அனைத்தும் உருவாகியிருக்கலாம். என்ற அறிவியல் நூல்களின் குறிப்பீடுகள் சில நமது சிந்தனையை கிளர்ச்சியூட்டுவதாக இன்றைக்கும் உள்ளது.

சூரிய மண்டலம் 456 கோடியே 90 லட்சம் ஆண்டுகள் என்ற அளவில் தமது உருவாக்கத்தை முடித்திருக்கிறது என்ற விபரத்தை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தி.ரு. பிரடரிக் மோய்னியர் மற்றும் உதவிப் பேராசிரியர் டேவிஸ் ஹீயின் போன்றோர் தமது ஆராய்ச்சியின் முடிவினைத் தெரிவித்திருக்கிறார்கள். (தினத்தந்தி - 25-12-2007, வெளிநாட்டுச் செய்திகள்)

கார்போனகியஸ் சாண்டிரைட் என்ற பழமையான விண்கல் ஒன்றை ஆராய்ந்ததின் மூலம், இக்கருத்தைக் கூறியிருக்கிறார்கள். பொருள் தோற்றம் பற்றிக் கூறும் ஆய்வு, எதுவாக இருந்தாலும் அதனை வரவேற்பதுடன் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதில் எவருக்கும் உரிமையுண்டு. எனவே 456 கோடியே, 60 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்ற கருத்தை எதிலிருந்து இவர்கள் வரையறுக்கிறார்கள்?
இக்கருத்தின் முதல் ஆதாரம், ஆண்டு என்பதாகும். இந்த ஆண்டு என்ற சொல் பூமியின் சுழற்சி மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. அதாவது பூமியின் 365 சுழற்சிகள் கொண்ட ஒரு அலகுதான் ஒரு ஆண்டு என்பதாகும்.

ஆகவே ஆண்டு என்பதே பூமியின் சுழற்சி என்பதிலிருந்து பெறப்படும்போது அதை வைத்து இது (சூரிய மண்டலம்) தோன்றியதற்கு உண்டான நடப்புக் கணக்கை எப்படிக் கூற இயலும்? எனவே இக்கருத்து மறு சிந்தனைக்கு உரியதாகும்.

4,58,80,00,000 365 = 1667320000000
458 கோடியே 80 லட்சம் ஆண்டுகள் என்றால் 45680000 365 சுற்றுகள்
ஆண்டுகள் 456800000 365 = 165773200000

பூமி ஒரு லட்சத்து அறுபதாயிரத்து எழுநூற்றி முப்பத்திரெண்டு கோடி சுற்றுகள் சுற்றி முடித்த முடிவுகள் 456 கோடியே 80 லட்சம் ஆண்டுகள் என்பது. சூரிய மண்டலம் உருவான காலக் கணக்கை இந்த அலகை வைத்துக் கொண்டு கருத்துக் கூறுவதென்பது எப்படிப் பொருத்தமாகும்?

எனது பெற்றோர்கள் திருமணத்தின்போது நான் பந்தல் அலங்காரம் செய்தேன் என்று கூறுவதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? தயவு செய்து இக்கருத்தை சிந்தித்து ஆய்ந்து பார்க்க வேண்டும்.

ஒரு ஆண்டு என்பதே நமது பூமியின் சுழல் தன்மையின் மூலம் கிடைக்கிறபோது பூமி உருவாவதற்கு முன்பு நடந்த நடப்பை இதன்மூலம் கருத்துக் கூறுவதென்பது எப்படிப் பொருந்தும் என்று கேட்கத் தோன்றுகிறது. எனவே எதையும் ஆராய்ந்து சொல்வதில் தவறில்லை. அதற்கு பூமியின் சுழற்சியின் எண்ணிக்கையைத் துணைக்குக் காட்டியதில் தான் பிரச்சினையுள்ளது.

இத்துடன் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரிய மண்டலத் தோற்றம் நீடித்திருக்-கிறது என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் 456,80,00,000 + 28,00,000 = 457,08,00,000 ஆண்டுகள் அதாவது நமது சூரிய மண்டலம் உருப்பெற்று இப்பொழுது வரை 437 கோடியே 8 லட்சம் ஆண்டுகள் முழுமை பெறுகிறது என்று தமது ஆய்வில் கூறுகின்றனர்.

இது தொடர்புடைய அனைத்து இயக்கங்-களுக்கும், தோற்றத்திற்கும் பூமியின் சுழல் தன்மை மட்டும் எப்படி அடிப்படை கணக்குத் தீர்க்கும் கருவியாகும்? தோற்றத்திற்கு முன்பே பூமி சுழல ஆரம்பித்துவிட்டனவா? இது மாதிரியான கருத்து பிரச்சினைகளின் கதவுகளை திறக்கவிடாமல் மூடிவிடக் கூடாது என்பதில்தான் சங்கடப்பட வேண்டியிருக்கிறது.


IRSA

0 comments: