விந்தையான விண்வெளி 6 th sense scientific: வட துருவத்தில் ஐஸ் இருக்காது

வட துருவத்தில் ஐஸ் இருக்காது

Posted by irsa


வட துருவத்தில் ஐஸ் பாறைகள் வேகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் 2013-ம் ஆண்டில் ஆர்க்டிக் பகுதியில் ஐúஸ இருக்காது என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

புவி வெப்பமடைவதால் இத்தகைய மாற்றம் நிகழ்வதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 60 ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் மேலே உயரும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் செயற்கைக்கோள் படம் மற்றும் கம்ப்யூட்டரில் திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பனிப் பாறைகள் உருகிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2007-ம் ஆண்டு ஆர்க்டிக் பகுதியில் இருந்த நிலையுடன் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல லட்சம் சதுர கிலோமீட்டர் வரையிலான ஐஸ் பாறைகள் உருகியுள்ளது தெரியவந்துள்ளது என்று பேராசிரியர் வியஸ்லா மஸ்லோவ்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கடற்படை சூப்பர் கம்ப்யூட்டர் அளித்துள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக லண்டனில் வெளியாகும் “அப்சர்வர்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.டென்மார்க்கின் புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது ஒரு சவாலாக உள்ளது.

இந்த நிலை நீடித்தால் பெருமளவில் பிரச்சணைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். 2013-ம் ஆண்டு கோடைக்காலத்தில் ஆர்க்டிக் பகுதியில் ஐúஸ இருக்காது என்று விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.

ஆர்க்டிக் பனிப் பாறையின் கெட்டித் தன்மையைக் கருத்தில் கொண்டு 2070-ம் ஆண்டு உருகலாம் என கருதினோம். ஆனால் புவி வெப்பமடைவதால் உருகும் தன்மை அதிகரித்துள்ளது. அத்துடன் பனிப்பாறையின் கெட்டித்தன்மை, நாங்கள் எதிர்பார்த்த அளவை விட மெல்லியதாக உள்ளதும் காரணமாக இருக்கலாம் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பீட்டர் வாடெம்ஸ் தெரிவித்தார்.


akash

0 comments: