ஓசோன் படுகையை பாதுகக்கும் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கனடா நாட்டு தலை நகரில் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி ஓசோன் படுகையை நாசம் செய்யும் ரசாயனங்களுக்கு எதிரான மான்ட்ரீல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்த தினமே 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பூமியை நாசம் செய்து வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கவனப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன.
பல ஆண்டுகால ஆய்வுகளால் எழுந்ததுதான் இந்த உடன்படிக்கை. அதாவது பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் ரசாயன வாயுக்களால் ஓசோன் படுகையில் ஓட்டை விழுகிறது என்பது இந்த ஆய்வுகளின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
மீவளி மண்டலத்தில் செறிவு தளர்ந்த ஓசோன் படுகையால் சூரியனின் புற ஊதாக்கதிர்களுக்கு பூமியின் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது.
உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 விழுக்காடு புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது.
துவக்கத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகள் ஓசோன் படுகையில் நாசம் விளைவிக்கும் ரசாயனங்களான குளோரோ ஃபுளோரோ கார்பன், ஹேலோன், கார்பன்டெட்ரா குளோரைடு ஆகியவற்றை படிப்படியாக குறைத்து முற்றிலும் இதன் வெளிப்பாட்டை ஒழிக்கும் முயற்சியை மேற்கொள்கின்றன.
ஆனால் இதே துறையில் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் மெதில் குளோரோஃபார்ம், ஹைட்ரோ குளோரோ ஃபுளூரோ கார்பன், மெதில் புரோமைட் ஆகிய ரசாயனங்களும்...
ஆபத்து மிகுந்தவை பட்டியலில் சேர்க்கப்பட்டு, இதன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ரசாயனங்கள் குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்பதனப் பெட்டிகள் உள்ளிட்ட பிற பொருட்களின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவதாகும். தீயணைப்புக் கருவி, நுரை வெளியேற்ற கருவி, உலோக-துப்புரவாக்க கருவிகள், நிலக்கிருமி அழிக்கும் புகை வெளியீட்டு எந்திரங்கள் ஆகியவற்றிலும் இந்த ரசாயனங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் 1993-ஆம் ஆண்டு முதல் மாண்ட்ரீல் உடன்படிக்கையை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட நாடுகள் இந்த ரசாயனங்களை கட்டுப்படுத்தும் 296 திட்டங்களுக்கு நிதி உதவிகளும் அளிக்கப்பட்டன.
இந்த அடிப்படையில் குளோரோ ஃபுளோரோ கார்பன் (சி.எஃப்.சி.) ரசாயனங்களை முற்றிலும் கட்டுப்படுத்திய நடவடிக்கையை இந்தியா இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதியே நிறைவேற்றியது. அதாவது, குறித்த நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே இந்தியா இந்த காரியத்தை நிறைவேற்றியுள்ளது.
மெதில் குளோரோஃபார்ம் உள்ளிட்ட பிற சி.டி.சி. ரசாயங்களின் பயன் மற்றும் உற்பத்தியையும் இந்தியா 85 விழுக்காடு கட்டுப்படுத்தியுள்ளது. ஹேலோன்கள் 2003ஆம் ஆண்டு முதலே நிறுத்தப்பட்டு வந்து இப்போது முழுதும் இதன் உற்பத்தி, நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்காக 2007-ஆம் ஆண்டு இதே தினத்தில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட மான்ட்ரீலில் மான்ட்ரீல் உடன்படிக்கை சிறந்த அமலாக்க விருது இந்தியாவிற்கு அளிக்கப்பட்டது.
நன்றி வெப்துனியா .
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment