விந்தையான விண்வெளி 6 th sense scientific

நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ?

Posted by irsa
அந்த காலத்திய ஈராக் பகுதிகளில் கொலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம். இந்நாகரீகத்தின் மிச்சங்களிலிருந்து கிடைத்த சுருள்களை படித்து ஆராய்ந்த சக்கரியா சிட்சின் சொல்வது என்னவென்றால் குரங்குமுக சாயல்கொண்டிருந்த நம் முகம் திடீரென இன்றைக்கு நாமிருக்கும் மனித முக சாயலாக மாற வெளி கோளை சேர்ந்த ஒரு கும்பல் தான் காரணம் என்கின்றார்.ஒவ்வொரு 3600 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபிரு(Nibiru) என்ப்படும் ஒரு கோள் நம்பூமியின் மிக அருகே வந்து செல்வதாகவும் அப்படி அக்காலத்தில் ஒரு முறை நம்பூமியருகே அக்கோள் வந்த போது அதிலிருந்து பூமிக்கு பறந்து வந்த அனுனாக்கி (Anunnaki) எனப்பட்ட அந்த கும்பல் அவர்கள் ஆதாயத்துக்காக நம் குரோமோசோம்களை சீண்டி அவர்கள் போலவே நம்மை மாற்றி அவர்களுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டு போய்விட்டார்கள் என்கிறதாம் அந்த பழங்கால சுருள்கள். பூமியில் கிடைக்கும் தங்கம் அவர்களின் விருப்ப பொருளெனவும் அதை தோண்ட நம் மக்களை வேலை வாங்கினார்கள் என்கின்றார் இந்த ஆய்வாளர். இந்த நேரத்தில் நம் இதிகாசங்களில் நாம் படிக்கும் விமானா, பறக்கும் ரதங்கள், வானிலிருந்து வந்த வானலோக தேவர்கள், விண்சேனைகள் கதைகள் நினைவுக்கு வந்துசெல்கின்றன.


விஞ்ஞானப்படி இப்படி ஒரு கோள் பூமியை நெருங்கும் போது பூமியின் ஈர்ப்பு விசைகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்ப்படுவதால் பூமி மிகவும் அல்லகோலப்படும். அப்படித்தான் அந்த காலத்தில் டைனோசர்கள் அழிந்து போயின, ஐஸ்யுகம் மறைந்து போயின, அட்லாண்டிஸ், லெமூரியா போன்ற கண்டங்கள் திடுமென கடலுக்குள் மூழ்கின. கொழித்திருந்த நாகரீகங்கள் பல அழிவுக்கு வந்தன என தியரி பேசப்படுகின்றது.

1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக.அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட Eris என்ற கோள்தான் அது என்கின்றனர்.


ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரு” தான் என்கின்றனர். அது இப்போது பூமியை மிகவும் நெருங்கி வந்துவிட்டதாகவும் தென் துருவ பகுதிகளில் இப்போதெல்லாம் வெறும் கண்ணுக்கும் தெரியும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அடுத்த வருட மத்தியில் அது நம் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும் அளவுக்கு அருகே நெருங்கிவிடுமாம். 2012-ல் அது இன்னும் நம் பூமியை மிகவும் நெருங்கி அது அதன் பாதையில் கடந்து போகுமாம். அப்போது அது இரண்டாவது சூரியன் போல வானில் காட்சி அளிக்குமாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அமெரிக்க அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர் அக்கூட்டம். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம்.

இன்றைக்கும் பூமியில் நிகழும் அநேக தட்பவெப்ப மாறுதல்களுக்கும், தட்டுகள் அனாயசமாய் உராய்ந்து உருவாகும் பூமிஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளுக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிபிரு தான் காரணம் அது இன்னும் நெருங்க நெருங்க அதன் தாக்கம் இன்னும் இன்னும் பூமியில் அதிகரிக்கும் என்பது அவர்கள் கருத்து. இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாய் போய் பூமியை நிபிரு அனுனாக்கிகள் கொள்ளை அடிப்பதால் பூமியிலிருந்து இலட்சக்கணக்கானோர் திடீரென காணாமல் போய்விடுவர் என்றும் அதனால் நிபிரு கும்பலுக்கும் பூமியின் மனிதர்களுக்கும் போர் நேரிடலாமென்றும் கதை விடுகின்றனர். எல்லாம் அடுத்த வருடம் மத்தியில் தெரிந்துவிடும்.

http://astrobiology.nasa.gov/ask-an-astrobiologist/question/?id=2759

இதற்கிடையே வரும் அக்டோபர் 17-ம் தியதி தொடர்ச்சியாக இந்தியாவில் 36 மணிநேரம் வெளிச்சமாகவும் அமெரிக்காவில் 36 மணிநேரம் இரவாகவும் இருக்கப்போகின்றதுவென சுட சுட SMS வழியும் ஈமெயில் வழியும் புரளி ஒன்று பரவிக்கொண்டிருக்கின்றது.

கதை என்னமோ சுவாரஸ்யமாய் தான் போய் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான மேதை காலிலியோ

Posted by irsa‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார்! ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார்! பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ!

ஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ! உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார்! கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!காலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

காலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார்! தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks]! 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார்! தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார்! அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது! 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார்! ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது!

அரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார்! கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார்! அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார்! 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர்! அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.

1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது! ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார்! ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது! அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது! காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.

பல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று! அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று! காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்!

1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார்! அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார்! அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது! எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.

‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார்! அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது! ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை! தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார்! மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது! உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது! காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார்! விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது! சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று! ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது!1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார்! அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார்! பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்!

காலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்

விஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ! அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ! துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும்! ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே! காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது

பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார்! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்! காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion]! மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity]! கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது! கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது! அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton 's Laws of Motion] படைக்க வழி காட்டியது!

அடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார்! ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார்! ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth 's Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்!1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார்! அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது! காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார்! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார்! 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார்! அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்!

விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார்! 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன! சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார்! பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார்! 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி! 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு! வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார்! அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை!

திருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது! வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது! தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா! உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள்! காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்!

அவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள்! அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது! ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது! புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo 's Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது!

மெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார்! 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது! அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர்! அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது! அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது!

சிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு! 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்!

விண்வெளியில் சாதிக்கவே பிறந்தாயோ பெண்ணே !

Posted by irsa


உலகே பரபரப்பாக ஒரு "திரில்'லை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அது... அமெரிக்காவின் "டிஸ்கவரி' விண்கலம் பத்திரமாகத் தரையிறங்குமா என்பதுதான். விண்கலத்தை பத்திரமாகத் தரையிறக்கி உலக மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றவர், விண்கலத்தை இயக்கிய பெண் கமாண்டர் இலீன் காலின்ஸ்.

கடந்த 2003ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட கொலம்பியா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் வேளையில், வெடித்துச் சிதறிய காட்சியை இன்னும் நம் கண்கள் மறக்கவில்லை. அதில் பயணம் மேற் கொண்ட இந்திய வீராங் கனை கல்பனா சாவ்லாவையும் யாரும் மறக்க முடியாது. விண்கலம் வெடித்துச் சிதறக் காரணம் என்ன? மீண்டும் விண்கலத்தை ஏவ முடியுமா? ஏவினாலும், பத்திரமாகத் தரையிறங்க முடியுமா? இத் தனை கேள்விகளுக்கும் விடை அளிப்பது போல், அனைவரின் பயத்தையும் உடைத்தெறிந்து சாதனை படைத்தவர் தான் இப்பெண் .


கொலம்பியா வெடித்துச் சிதறுவதற்கு முன், மேற்கொண்ட முதல் பயணத்தில் 1999ம் ஆண்டில் பயணம் செய்தவர் இலீன் காலின்ஸ். அது வெடித்துச் சிதறிய செய்தி கேட்டு அரண்டு போனாலும், உடனே சுதாரித்து, அடுத்த விண்கலத்தை ஏவும் பணியில் மனமுவந்து ஈடுபட் டார். கொலம்பியா பூமியிலிருந்து கிளம்பியபோது அதன் வெளிப்புறத்திலிருந்து ஒரு தகடு கீழே விழுந்தது. அப்போது அதை யாரும் பிரச்னையாகக் கருதவில்லை.


"டிஸ்கவரி' விண்கலம் ஜூலை 26ம் தேதி விண்ணிற்குச் செல்லக் கிளம்பியபோதும், கலத்தின் வெளிப்புறத் திலிருந்து தகடு ஒன்று கழன்று விழுந்தது. ஆனால் இந்த முறை விஞ்ஞானிகள் உஷாராகி விட்டனர். விண்கலத்தை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள ஓடு விழுந் ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலம் சென்றதுமே அதைச் சரி செய்ய முடிவு செய்தனர். விண்கலத்தில் சென்று, பிரச்னைகளைச் சரி செய்து, சரியான வானிலை இல்லாத சூழ்நிலையில், தரையிறங்கும் சிக்கலை கவனமாகக் கையாண்டு, வெற்றிகரமாக பயணத்தை முடித்த பெருமையில் முக்கியத்துவம் பெரும் பங்கை ஆற்றியவர் இலீன் காலின்ஸ்.இவை எல்லாம் எப்படி சாத்தியமாயிற்று, யார் இவர் என்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா? இனி காலின்சைப் பற்றிய விவரங்களைப் படியுங்கள்.

கடந்த 1956ம் ஆண்டு நியூயார்க் நகரில் எல்மிரா என்ற பகுதியில் நவம்பர் 19ம் தேதி பிறந்தார் இலீன் காலின்ஸ். விமானங்கள் கட்டுமானம், பராமரிப்பு என்று எப்போதும் சுறுசுறுப்பாய் இயங்கி வரும் பகுதி எல்மிரா. 1890ம் ஆண்டிலிருந்தே இதே தொழிலில் இப்பகுதி ஈடுபட்டு வந்துள்ளதால், காலின்சுக்குச் சிறு வயது முதலே விமானத்தில் பறக்க ஆசை பிறந்தது.

இவருக்கு 9 வயதானபோது, இவரது பெற்றோர் விவாகரத்தில் பிரிந்து விட்டனர். மனம் ஒடிந்தார் காலின்ஸ். போராடி வெற்றி காண்பதில் சிறு வயது முதலே பயிற்சி மேற்கொண்டார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேல்படிப்பு படிக்க பணம் இல்லை. 16 வயதில் வேலைக்குச் சேர்ந்தார். ஆயிரம் டாலர் சேர்த்தார். 1974ம் ஆண்டு நியூயார்க்கில் எல்மிரா அகடமியில் சேர்ந்து, கணித பாடத்தில் பட்டம் பெற்றார்.

கார்னிங் கம்யூனிட்டி காலேஜில் அறிவியல் கற்றுத் தேர்ந்தார். 1978ம் ஆண்டு சிராகுஸ் பல்கலை.,யில் சேர்ந்து கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற் றார். ஸ்டான்போர்டு பல்கலை.,யில் 1986ம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சியில் முதுகலை பட்டம் பெற்றார். விண்வெளி இயக்கம் மற்றும் நிர்வாகம் குறித்து வெப்ஸ்டர் பல்கலை.,யில் 1989ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். இப்படி படிப்படியாக உயர்ந்தபடியே, "பைலட்' பயிற்சியும் மேற் கொண்டார். அதில் தான் இவர் வித்தியாசம் தனித்துவமாக மாறியது


படிப்பு: கடந்த 1979ம் ஆண்டு ஓக்லஹாமாவில் பைலட்டுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து விமானப் படை இளநிலை பைலட்டாகத் தேர்ச்சி பெற்றார். 1982ம் ஆண்டு வரை, அதே பயிற்சி மையத்தில் சிறு ரக விமானத்தின் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 1983 முதல் 85 வரை, கலிபோர்னியாவில் உள்ள டிராவிஸ் நிறுவனத்தில் அதிக இருக்கைகள் கொண்ட விமானத்திற்கான கமாண்டராகவும், விமான ஓட்டுநர் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். 1986ம் ஆண்டு வரை ஏர் போர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பயிற்சி மேற் கொண்டார். 86 முதல் 89 வரை, கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப் படை அகடமியில் சேர்ந்து பணியாற்றினார். அங்கு கணக்குப் பாடத்திற் கான துணை விரிவுரையாளராகவும், டி41 விமானத்திற்கான விமான ஓட்டுனர் பயிற்சியாளராகவும் பணியற்றினார். கலிபோர்னியாவில், விமானப்படை ஓட்டுனர் பள்ளியில் விண்வெளி வீரர் பயிற்சி மேற் கொண்டார்.


1990ம் ஆண்டு வரை இங்கு பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான "நாசா'விற்கான விண்வெளி வீரர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

அதற்குக் காரணம் மொத்தம் 5000 மணி நேரம் , அதுவும் 30 ரகவிமானங்களில் பறந்த அனுபவம் உண்டு. அத்துடன் 419 மணி நேரம் விண்வெளி ஓடத்தில் தங்கி பறக்கும் முன்பயிற்சி பெற்றவர்.

இவர் கணவர் வர்த்தக பைலட் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பயிற்சியும், சாதனைகளும்: கடந்த 1991ம் ஆண்டு விண்வெளி வீரர் குழுவில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அபார திறனால், மிக வேகமாக வளர்ந் தார். பூமியைச் சுற்றி வரும் விண்கலத்தை வடிவமைப்பதில் பயிற்சி பெற்றார். விண்வெளி வீரர்களைத் தயார் செய் யும் பணியில் ஈடுபட்டார்.

விண்கலத்தை இயக்கும் வல்லுனர் ஆனார். விண்கலத்தை பூமியிலிருந்து கிளப்புவது முதல், பிரச்னைகள் ஏற்பட்டால் திறம்படச் சமாளிப் பது வரை அனைத்தையும் கையாண் டார். "ஸ்பேஸ்கிராப்ட் கம்யூனிகேட்டராக'வும் பணியாற்றினார்.

நாசாவில் வேகமாக வளர்ந்து, விண்வெளி செல்லவும் தயாரானார். 1995ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ஏவப்பட்ட விண்கலத்தில் பைலட்டாகப் பயணித்தார். விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ரஷ்யாவின் "மிர்' நிலையத்திற்குச் சென்று வந்தார். விண்வெளிக்குப் பறந்த முதல் பெண் பைலட் இவர் என்ற பெருமை பெற்றார். அதனை அடுத்து, 1997ம் ஆண்டு மே 15ம்தேதி விண் ணுக்குச் சென்ற விண்கலத்திலும் பயணித்தார். அதன் பிறகு, 1999ம் ஆண்டு கொலம் பியா விண்ணுக்குச் சென்றது. அதில் விண்கலம் மற்றும் அதில் பயணிக்கும் குழுவின் ஒட்டுமொத்த கட்டுப் பாட்டையும் கையிலேந்திச் சென்று, வெற்றிகரமாக கொலம்பியாவைக் கீழிறக்கினார்.

ஒட்டுமொத்த கட்டுப் பாட்டை ஏற்ற முதல் பெண் விண்வெளி வீரர் என்ற சாதனையை இம்முறை நிகழ்த்தினார்.

இப்போது, ஏழு விண்வெளி வீரர்களை ஏந்திச் சென்ற டிஸ்கவரியையும் இயக்கி, குழுவிற்கும் தலைமை ஏற்று சாதனையைத் தொடர்கிறார்.

சொந்த வாழ்க்கை: இவ்வளவு "உயரே' பறக்கும் இவர் படிப்பு முழுதும் "ஸ்காலர்ஷிப்'பில் தான் நடந்தது. இவரது வாழ்க்கை குறித்து இவரே சொல்கிறார்: "சிறு வயதிலேயே விண் வெளி வீரர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். எல்லாருமே ஆண்களாகவே தானே உள்ளனர், ஏன் பெண் களே இல்லை என்று யோசிப்பேன். ஆனால், அதற்காக மனசெல்லாம் வருந்தியதில்லை.

என் அம்மா எங்களை விட்டுப் பிரிந்தது எனக்குப் பேரடியாக விழுந்தது. என் தந்தையும் வேலையை இழந்ததால், சாப்பாட்டுக்கே சிரமப்பட்டோம். திக்கித் திணறி பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள முயன்றேன். ஆனால், அங்கே ஏகப்பட்ட ஆசிரியர்கள் பயிற்சிக்காகக் காத்திருந்தனர். மனம் மாறி, பைலட்டாக பயிற்சி மேற்கொண்டேன். 19வது வயது தான் எனக்குத் திருப்புமுனை. அதன் பிறகு அனைத்துமே திட்டமிட்டபடி நடந்தன. 1974ம் ஆண்டு பெண் ராணுவ பைலட்டுகள் தேவை என்ற விளம்பரத்தை பேப்பரில் படித்தேன். சரியான நேரத்தில் சரியான சந்தர்ப்பம் அமைந்தது.

ஆனால், என் சக பைலட்டுகள் மனைவிகள் என்னிடம் தகராறு செய்தனர். பைலட் உடையில் நான் அவர்களுடன் வேலை செய் வதை அவர்களுடைய மனைவியர் விரும்பாமல், என்னை ராணுவத்திலிருந்து வெளியேற்றத் துடித்தனர். இதனால் எனக்கு நண்பர்கள் இழப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. என்னுடன் உண்மையாகப் பழகியவர்கள் மட்டும் இன்னும் நண்பர்களாகவே பழகியபோது மனதில் உறுதி பிறந்தது. மிக நேர்மையாக, வெளிப்படையாக இருக்க முடிவு செய்தேன். யாருடனும் அனாவசியமாக ஊர் சுற்றுவதில்லை என்பதை மிக நேர்மையாகத் தெளிவுபடுத்தினேன். இறுதியில் என்னைச் சந்தேகித்தவர்களே என்னுடன் நண்பிகளாகப் பழகத் துவங்கினர்.

கலிபோர்னியாவில் சரக்கு விமான ஓட்டுநராக இருந்தபோது 1983ம் ஆண்ட பேட் யங் என்ற பைலட்டைச் சந்தித்தேன். இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இப் போது எனக்கு இரண்டு குழந்தைகள்.

முதன்முதலில் விண்ணுக்குப் பறந்தபோது என் முதல் குழந்தை நான் நிலவுக்குச் செல்கிறேன் என்று நினைத்தாள். அவள் வளர வளர அவளுக்கு எல்லாவற் றையும் புரிய வைத் தேன். இன்னும் கூட சில குழந்தைகள் "விண் வெளியில் கடவுளைப் பார்க்கிறீர்களா?' என்று கேட்கின்றனர். அவர்களுக்கும் எளிமையான முறையில் விவரங்களை எடுத்துச் சொல்கிறேன்.


எப்படி இந்த அசாத்திய திறமை சாத்தியமானது? "பயிற்சி... பயிற்சி... பயிற்சி தான்! நாம் செய்யும் வேலை குறித்து 100 சதவீதம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். நம்பிக்கையுடன் வேலை செய்ய இது மிக மிக அவசியம். விண்வெளி ஆராய்ச்சி, விண்கலத்தில் பயணிப்பது போன்ற வேலைகளில், ஒரே ஒரு துளி சந்தேகம் இருந்தால் கூட, நாம் அந்தப் பணியைத் தொடக் கூடாது. மீறித் தொட்டு விட்டால், அடுத்த நொடி மரணத்தைத் தழுவ வேண்டியது தான். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை முற்றிலுமாக உணர்ந்தவராக இருப்பது தான் என் வேலைக்கான சவால். இதற்கு கடுமையான பயிற்சி முக்கியம். சிறு வயது முதலே போராட் டத்தை வெற்றி கொள் ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டேன். விண் வெளி பயணத்தில் வீரர்கள் அணியும் உடையே கவசம் போன்றது. அதில் தான் நாங்கள் இயக் கும் கருவிகளும் அதற் கான உபகரணங்களும் இருக்கும். விண் வெளி ஓடம் புறப்படும் போது ஏற்படும் சத்தம், மற்றும் ஒளி , அதற்குப்பின் புவிஈர்ப்பை விட்டு முற்றிலும் புதிதாக நாங்கள் ஆற்றும் பணிகள் ஆகியவை எல்லாமே சவால் நிறைந்தவை. இப்படி விவரிக்கும் காலின்சின் வாங்கிய பரிசுகளும், சான்றிதழ்களும் ஏராளம்.

விருதுகள்:
"டிபென்ஸ் சுப்பீரியர் சர்வீஸ் மெடல்:' அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் ராணுவத்தில், முக்கியப் பொறுப்பில் திறம்படச் செயலாற்றுவோருக்கான விருது. மூத்த அதிகாரிகளுக்கும், மேலதிகாரிகளுக்கும் வழங்கப்படும் விருது இது.

"டிஸ்டிங்விஷ்டு பிளையிங் கிராஸ்:' அமெரிக்க ஆயுதப் படைக்கு உதவியாக விமானத்திலிருந்து தாக்குதல் நடத்துவோருக்கு வழங்கப்படும் விருது. ஹீரோ போன்று அசாதாரண முறையில் சிறப்பாகச் செயலாற்றிய வகையில் காலின்சுக்கு இந்த விருது வழங்கப் பட்டது.

"டிபென்ஸ் மெரிடோரியல் சர்வீஸ் மெடல்:' அமெரிக்க ராணுவத்தில் மிக உயரிய விருதுகளில் மூன்றாவதாக வழங்கப்படும் விருது இது.

"கமாண்டேஷன் மெடல்:' ராணுவப் பணியில் ஈடுபடும்போது எதிரிகளை நேரடியாகத் தாக்கி வெற்றி கொள்வோருக்காக வழங்கப்படும் இடைநிலை விருது இது.

"ஆர்ம்டு போர்சஸ் எக்ஸ்பெடிஷனரி மெடல்:' அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியால் தோற்றுவிக்கப் பட்ட விருது இது. ராணுவத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் சிலருக்கென ஒதுக்கப்படும் விசேஷப் பணியிலும் சிறப்பாகப் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட விருது.

"லெஜன் ஆப் ஆனர்:' வீரதீரச் செயலுக்காக பிரான்ஸ் நாடு வழங்கிய விருது.காலின்ஸ் பெயரில் சர்வதேச விமான நிலைய நுழைவாயில்: இத்தனை விருதுகள் வாங்கியவரின் பெயரில் இப்போது ஒரு விமான தளமும் இயங்குகிறது. சிராகுஸ் ஹான்கான் சர்வதேச விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில், காலின்ஸ் பெயரில் நிறுவப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமைகளைப் பெற்ற காலின்சின் சாகசத்தை விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களே வாய் ஓயாமல் பாராட்டுகின்றனர். நாமும் சேர்ந்து பாராட்டுவோம்!

Not-So-Heavy Metal: Electrical Conductivity in Textiles

Posted by irsa


Movies and television have educated us more than we know. Thanks to detective thrillers, we understand about the drama of "wearing a wire." But a NASA-sponsored technology is paving the way for all of us to be "wearing a wireless."

Metal wiring weaves a less-than-perfect web. Copper is the most common electrical conductor, but as with most metals, it can be heavy, expensive, and breakable. In contrast, conductive fibers provide a lightweight, flexible alternative to copper wiring.Think of conductive fibers as electric yarn where a polymer fiber is given a metallized coating. Multiple fibers are then wrapped together to form light, supple strands that conduct electricity.

While less conductive than copper, these fibers can carry virtually any necessary current. Coupled with lightness and flexibility, this is very useful in space applications where electronics battle small spaces and severe stress. These properties are also ideal for electromagnetic interference (EMI) shielding, aerospace wiring, and other applications that need strong, lightweight conductivity. Conductive fibers can also reduce the cost of metal wiring.

Despite its obvious benefits, this technology hasn't always been readily available because of production challenges. NASA partnerships within the high-tech textile industry have advanced development and manufacturing processes, increasing output while reducing cost.

Image at right: Conductive fibers are shown stitched to cloth. (Image credit: Syscom Technology, Inc.)

While they have many uses in the space industry, conductive fibers can also reduce the maintenance cost of commercial planes, military aircraft, and missile guidance wires. On the ground, you might see them in power lines, lightweight deployable antennas, and airbag wiring in cars. Giant-areas of flexible circuits might be used for mass energy harvesting. You could also reach out and touch this technology in the form of a flexible keyboard.

If all of this gives you a chill of anticipation, you can warm up with heated clothing or thermal blankets interwoven with conductive fibers. The electronic textiles (electrotextiles) industry is still in its infancy, but future fabrics will offer protection from the environment while still being soft and comfortable. Intelligent, built-in features -- such as multifunctional sensors and computing devices -- will result in the ultimate smart accessories.


Image at right: Three-strand, conductive coated yarn under a millimeter scale. (Image credit: Syscom Technology, Inc.)

Conductive fibers are already being woven into experimental medical patient apparel such as jackets and vests that transmit vital signs to health care personnel. Military and law enforcement personnel can benefit from uniforms and body armor equipped with built-in sensors and computing devices. This would enhance battlefield monitoring by reporting vital signs and wound locations on soldiers.

Electrotextiles may one day provide a variety of functions ranging from listening to MP3s to controlling temperature. Sometime in the near future, you may see people wearing clothes wired for cell phones, PDAs, gaming devices, and music players. One of those people may be you.

AmberStrand™ is a trademark of Syscom Technology, Inc.

Hawking Experiences Microgravity

Posted by irsa
Noted wheelchair-bound physicist Stephen Hawking proceeds to the Zero Gravity Corp. airplane for his first flight in microgravity. Zero-G founder Peter Diamondis, left, and a caregiver joined Hawking on the flight that took off from the same runway the space shuttles land on at Kennedy Space Center. Hawking suffers amyotrophic lateral sclerosis disease which has cost him also all of his neuromuscular control. He said he wanted to make the flight because it is as close as he can come to going into space right now. The flight was made aboard a modified Boeing 727 that flies steep parabollic arcs between 24,000 feet and 32,000 feet, inducing about 25 seconds of free-fall at a time. Photo credit: NASA/Kim Shiflett

பூமியைத் தாக்கும் விண்கற்கள்

Posted by irsa


அமெரிக்காவில் அரிசேனா மாகாணத்தில் டெட்ரிஃபைய்ட் ஃபாரஸ்ட் என்னும் பாலைவனத்திற்கு சற்று தொலைவில், பாரிஸ்கர் கிடாரப் பள்ளம் என்ற ஒரு பள்ளம். அதன் குறுக்களவு முக்கால் மைல், ஆழம் 600 அடி என்ற அளவில் இன்றைக்கும் இருக்கிறது.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு விண் கல் ஒன்று விழுந்த வடுதான் அந்தப் பள்ளம். இது மாதிரி எத்தனையோ பள்ளங்கள் பூமியின் மீது காணப்பட்டாலும், அது உருவான விதம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள முயற்சிக்காததால் பள்ளம் வந்த விதம் பற்றிய விவரங்கள் நம்மால் அறியப்படாமல் இருக்கிறது.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 6 மைல் அகலமுள்ள K-T என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கல் மெக்ஸ்கோவின் யுகடான் தீவகற்பத்தில் (Yucatan Peninsula) விழுந்தது. அந்த அதிர்ச்சி ஆட்டத்தில் “கனற்புயல்” (Firestorm) எழுந்து தீமயக் குப்பைகள் உண்டாயின. அவை மீண்டும் பூதளத்தைத் தொட்டு தீக்காடுகளில் பெரும் புகை மண்டலம் கிளம்பி பல உயிரினங்கள் மூச்சு முட்டிச் செத்தன ! உதாரணமாக 1908 இல் சைபீரியாவில் ஏற்பட்ட காற்று வெடிப்பில் 1300 சதுர மைல்களில் 60 மில்லியன் மரங்கள் விழுந்தன ! ஆறு மைல் அகலமுள்ள ஒரு விண்கல் பெரும் நகர மையத்திலே விழுந்தால் என்ன நிகழும் என்பதைக் கற்பனை செய்ய இயலாது !

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரும் விண்குன்று (6-60 மைல் ?) பூமியின் மீது விழுந்து அப்போது உலவிய டைனோ சாரஸ் விலங்கினம் எல்லாம் செத்துப் புதைந்து போயின ! 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறைத் தாக்குவதாய் எதிர்பார்க்கும் 300 அடி அகலமுள்ள ஒரு விண்கல் பூமியை மோதினால் அது 20 மெகாடன் டியென்டி வெடிப்பு விளைவுகளை உண்டாக்கும், அதைவிட அரை மைல் அகற்சியுள்ள ஒரு பெரும் விண்பாறை பூமியைத் தாக்கினால் 20,000 மெகாடன் டியென்டி வெடிப்புச் சேதாரங்கள் விளையுமாம். நாசா விஞ்ஞானிகள் நியூ மெக்ஸிகோ தளத்தில் விண்கற்களை உளவும் “லீனியர் திட்டங்களை” (LINEAR - Lincoln Near Earth Asteroid Research Program) அமைத்து, 0.6 மைல் அகல விண்பாறை எதுவும் பூமிக்கு அருகில் வருகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் ! அதன்படி 1995 ஆம் ஆண்டில் 0.6 மைல் அளவுள்ள பனிரெண்டு விண்பாறைகள் விண்வெளியில் அறியப்பட்டன !

விண்கற்கள் ஆங்கிலத்தில் 'Meteorites' என்று அழைக்கப் படுகின்றன. இந்த விண்கற்களில் பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் சுற்றுகின்றன. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அண்டக் கோளங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விண்கற்கள்
சிதறியிருக்கலாம்.

விண்கோள்களிலிருந்து சிதறிய அல்லது விண்கோள்களின் ஈர்ப்பு ஆற்றலில் இழுத்துக்கொள்ளப்படாத அண்டவெளித் துண்டுகளாக விண்கற்கள் விண்வெளியில் வீசப்பட்டிருக்கலாம் என்று பல மாதிரியான கருத்துகள் உள்ளன. பூமியில் விழுந்த பெரும்பான்மையான விண்கற்களில் இரும்பு, நிக்கல், உலோகக் கலவை இருப்பது அறியப்பட்டது. இவை பெரும்பாலும் கடினமான பாறை மற்றும் உலோகங்களால் உண்டானவை. புவியீர்ப்பு சக்தி இல்லாததால், அவற்றால் மற்ற விண்கற்களையோ அல்லது மற்ற கிரகங்களையோ ஈர்க்க முடிவதில்லை.

விண்வெளியில் இருக்கும் போது, இது விண்கற்கள் என அழைக்கப்படுகின்றன. பூமியில் விழும் போது, காற்று மண்டலத்தின் வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது 'எரி நட்சத்திரம்' என அழைக்கப்படுகின்றன. இவை முழுமையாக எரிந்து காற்று மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியில் விழுந்து பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

விண்கற்கள் அடிக்கடி பூமி நோக்கி விழும் விந்தைக் கண்காட்சி ஓர் அபாயகரமான அண்டவெளி நிகழ்ச்சி! இரவு நேரங்களில் விண்வெளியில் காணப்படும் ஒளிமய வீச்சுகள் விண்கற்கள் பொழிவைக் காட்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 பவுண்டுஎடையுள்ள 3 அல்லது 4 விண்கற்கள் பூமியை நோக்கிப் பாய்கின்றன. பூமிக்குக் கவசக் குடையாய்க் கடவுள்அமைத்துள்ள வாயு மண்டல உராய்வில், வேகமாய்ப் பாயும் விண்கற்கள் சிதறி, முழுவதும் அல்லது ஓரளவு எரிந்து சாம்பலாய் போய்விடும். அந்த அழிவில் தப்பி, பூமியில் விழுந்த பல விண்கற்கள் உலகில் கண்டெடுக்கப்பட்டுக் கண்காட்சி சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையில் சுற்றும் சில கற்கள், அதன்சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் அருகில் நகருகின்றன. இவ்வாறு நுழையும் கற்கள், பூமியின் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றன. சுமார் 200 மீட்டர் விட்டமுள்ள ஒரு கல், கடலில் விழுவதாக வைத்தாலும், அது ஆழிப் பேரலைகளை (சுனாமி) உருவாக்கும். சுமார் 1 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஒரு கல் எழுப்பும் புகை மண்டலம் இந்த பூமியில் சுமார் 1 வருடம் சூரிய ஒளி படாமல் வைக்கும். இதன் காரணமாக பூமியில் குளிர் அதிகரிக்கும். உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அவ்வாறு பூமியைத் தாக்கிய விண்கற்களால்தான் நம் முன்னோர்களான 'டைனோசர்ஸ்' இனம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூண்டோடு அழிந்தன.

அந்த சம்பவத்தில் பூமியில் பல கால நிலை மாற்றங்கள் நிகழ்ந்தன. குளிர்ந்த பகுதிகள் சூடாகவும், சூடான பகுதிகள் குளிர்ந்த பகுதியாகவும் மாறின. நூறு ஆண்டுக்கு ஒரு முறை 4000 டன் எடையுள்ள விண்கல் ஒன்று பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.1908ஆம் ஆண்டு, ஜூன் 30இல் பூதள விஞ்ஞானிகளால் சுமார் 70 மீட்டர் விட்டமிருக்கும் என்று கணிக்கப்பட்ட ஒரு கல், 1000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சைபீரியன் காட்டை அழித்தது. அதுவும் இந்த கல் பூமியில் மோதவில்லை. மாறாக, அது பூமியை நோக்கி பயணித்த வழியில் பூமியிலிருந்து 5 கிலோமீட்டர் உயரத்தில் சைபீரியன் காட்டின் மேல் வெடித்தது. 30 கிலோமீட்டர் சதுர காடுகள் அழிந்தன.

மரங்கள் சட்டென்று ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகின. 14 கிலோமீட்டர் வரை மரங்கள் "ஒரு பக்கத்தில்" நீர் உரிஞ்சப்பட்டு வற்றின. 80 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்தவர்கள் இறந்தனர். இது அனைத்தும் இந்தக் கல் ஆவியாகக் கூடிய பொருளால் ஆனது. அதுவே பாறையாக இருந்திருந்தால்....?? இவ்வாறு பல சம்பவங்கள் நம் பூமியில் நிகழ்ந்திருக்கின்றன. அண்ட வெளியிலேயே மிகப் பெரிய விண்கல்லாக கருதப்படுவது ஜூன் 4, 2002-இல் கண்டுபிடிக்கப்பட்ட "Quaoar" ஆகும்.

இதன் விட்டம் 1,200 கி.மீட்டர் ஆகும். நம் பூமியின் பத்தில் ஒரு பகுதி விட்டம் கொண்டது என்று பூதள விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு காட்டுகிறது. அது சூரியனை 6 பில்லியன் கிலோ மீட்டர் சுற்றுகிறது. அது சூரியனை சுற்றிவர பூமியின் 286 வருடங்கள் ஆகிறது. இது பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளால் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


விண் கற்கள் தினந்தோறும் பூமியை நோக்கி வந்தபடியே இருக்கின்றன. சில விண் கற்கள் பூமியின்மீது விழுந்து வடுக்களை ஏற்படுத்துவதுடன் வெடித்துச் சிதறி சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. 1908 ஆம் ஆண்டில் மிகப் பெரிய விண் கல் ஒன்று சைபீரியாவில் வந்து விழுந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெரிய பெரிய மரங்கள் பிடுங்கி எறியப்பட்டு, ரெயின்டியர் எனற மான் மந்தை ஒன்று முழுவதுமாக அழிந்தொழிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வெடிப்பினால் ஏற்பட்ட அழுத்த அலை சுமார் சுமார் 3000 மைல்களுக்கு அப்பால் இருக்கக் கூடிய இங்கிலாந்து நாட்டை அதிர வைத்ததாக சில அறிவியல் நூல்கள் குறிப்பிடுகிறது.

இந்நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் விஞ்ஙானிகள் மத்தியில் இக்கற்கள் பெரும் ஆய்வுக்கு உட்படுத்தப்ப்டடு இதன் தொற்றுவாய் என்ன? எங்கிருந்து வருகிறது என்பதில் கவனம் செலுத்தி ஆய்வுகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர். விண் கற்களில் இரண்டு வகையான கற்கள். மண் பொருளான கற்களாகவும், மற்றவை உலோகப் பொருள்களால் ஆனவையாகவும் இருக்கின்றன.
ஒரு காலத்தில் திரவ நிலையிலிருந்து பின்பு அது இறுகி உறுதிப்படுத்தப்பட உலோகப் பொருட்களில் உருவாகியிருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். சூரிய மண்டலத்தின் உருவாக்கத்தில் இடம் பெறப்பட்ட இந்தப் பொருட்கள் கிரகங்களின் உள்ளார்ந்த உலோகப் பொருட்களின் பகுதியாக இருந்து, பின்பு அது உடைந்து சிதறிய நிலையில் விண்வெளியில் சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் வரிசையில் இதுவும் இடம் பெற்று இன்றளவும் சுற்றி வரும் நிகழ்வு நடந்து கொண்டுதானிருக்கிறது. (செவ்வாய் கோளுக்கும், வியாழன் கோளுக்கும் நடுவே ஒரு கோள் உடைந்து நொறுங்கி இன்றளவும் சுற்றிவரும் நிகழ்ச்சியை பார்க்க முடியும்)

சூரிய மண்டலம் உருவாக்கம் பெறப்பட்ட முதல் தளத்திலேயே இது மாதிரியான விண் கற்கள் மற்றும் தூகப்படலம் உருவாக்கம் பெற்று, அவைகள் ஒழுங்குமுறை தவிர்த்த சுழற்சியின் மூலம் விண் பொருள் அனைத்தும் உருவாகியிருக்கலாம். என்ற அறிவியல் நூல்களின் குறிப்பீடுகள் சில நமது சிந்தனையை கிளர்ச்சியூட்டுவதாக இன்றைக்கும் உள்ளது.

சூரிய மண்டலம் 456 கோடியே 90 லட்சம் ஆண்டுகள் என்ற அளவில் தமது உருவாக்கத்தை முடித்திருக்கிறது என்ற விபரத்தை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தி.ரு. பிரடரிக் மோய்னியர் மற்றும் உதவிப் பேராசிரியர் டேவிஸ் ஹீயின் போன்றோர் தமது ஆராய்ச்சியின் முடிவினைத் தெரிவித்திருக்கிறார்கள். (தினத்தந்தி - 25-12-2007, வெளிநாட்டுச் செய்திகள்)

கார்போனகியஸ் சாண்டிரைட் என்ற பழமையான விண்கல் ஒன்றை ஆராய்ந்ததின் மூலம், இக்கருத்தைக் கூறியிருக்கிறார்கள். பொருள் தோற்றம் பற்றிக் கூறும் ஆய்வு, எதுவாக இருந்தாலும் அதனை வரவேற்பதுடன் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதில் எவருக்கும் உரிமையுண்டு. எனவே 456 கோடியே, 60 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்ற கருத்தை எதிலிருந்து இவர்கள் வரையறுக்கிறார்கள்?
இக்கருத்தின் முதல் ஆதாரம், ஆண்டு என்பதாகும். இந்த ஆண்டு என்ற சொல் பூமியின் சுழற்சி மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. அதாவது பூமியின் 365 சுழற்சிகள் கொண்ட ஒரு அலகுதான் ஒரு ஆண்டு என்பதாகும்.

ஆகவே ஆண்டு என்பதே பூமியின் சுழற்சி என்பதிலிருந்து பெறப்படும்போது அதை வைத்து இது (சூரிய மண்டலம்) தோன்றியதற்கு உண்டான நடப்புக் கணக்கை எப்படிக் கூற இயலும்? எனவே இக்கருத்து மறு சிந்தனைக்கு உரியதாகும்.

4,58,80,00,000 365 = 1667320000000
458 கோடியே 80 லட்சம் ஆண்டுகள் என்றால் 45680000 365 சுற்றுகள்
ஆண்டுகள் 456800000 365 = 165773200000

பூமி ஒரு லட்சத்து அறுபதாயிரத்து எழுநூற்றி முப்பத்திரெண்டு கோடி சுற்றுகள் சுற்றி முடித்த முடிவுகள் 456 கோடியே 80 லட்சம் ஆண்டுகள் என்பது. சூரிய மண்டலம் உருவான காலக் கணக்கை இந்த அலகை வைத்துக் கொண்டு கருத்துக் கூறுவதென்பது எப்படிப் பொருத்தமாகும்?

எனது பெற்றோர்கள் திருமணத்தின்போது நான் பந்தல் அலங்காரம் செய்தேன் என்று கூறுவதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? தயவு செய்து இக்கருத்தை சிந்தித்து ஆய்ந்து பார்க்க வேண்டும்.

ஒரு ஆண்டு என்பதே நமது பூமியின் சுழல் தன்மையின் மூலம் கிடைக்கிறபோது பூமி உருவாவதற்கு முன்பு நடந்த நடப்பை இதன்மூலம் கருத்துக் கூறுவதென்பது எப்படிப் பொருந்தும் என்று கேட்கத் தோன்றுகிறது. எனவே எதையும் ஆராய்ந்து சொல்வதில் தவறில்லை. அதற்கு பூமியின் சுழற்சியின் எண்ணிக்கையைத் துணைக்குக் காட்டியதில் தான் பிரச்சினையுள்ளது.

இத்துடன் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரிய மண்டலத் தோற்றம் நீடித்திருக்-கிறது என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் 456,80,00,000 + 28,00,000 = 457,08,00,000 ஆண்டுகள் அதாவது நமது சூரிய மண்டலம் உருப்பெற்று இப்பொழுது வரை 437 கோடியே 8 லட்சம் ஆண்டுகள் முழுமை பெறுகிறது என்று தமது ஆய்வில் கூறுகின்றனர்.

இது தொடர்புடைய அனைத்து இயக்கங்-களுக்கும், தோற்றத்திற்கும் பூமியின் சுழல் தன்மை மட்டும் எப்படி அடிப்படை கணக்குத் தீர்க்கும் கருவியாகும்? தோற்றத்திற்கு முன்பே பூமி சுழல ஆரம்பித்துவிட்டனவா? இது மாதிரியான கருத்து பிரச்சினைகளின் கதவுகளை திறக்கவிடாமல் மூடிவிடக் கூடாது என்பதில்தான் சங்கடப்பட வேண்டியிருக்கிறது.


IRSA

2,100இல் கடல்மட்டம் 6.6 அடி வரை உயரலாம்!

Posted by irsa


புவி வெப்பமடைவது தொடர்ந்து தீவிரமடைந்தால் வரும் 2100ஆம் ஆண்டில் உலகளவில் கடல்மட்டம் 2.6 அடி முதல் 6.6 அடி வரை உயரும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் ஏற்கனவே இதுதொடர்பான சில ஆய்வு முடிவுகளில் குறிப்பிட்டது போல் 20 அடி முதல் 7 மீட்டர் வரை உயரும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான் என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

இதுகுறித்து கொலராடோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்டி அண்டு அல்பைன் ரிசர்ச் பல்கலை‌க்கழக‌த்தை சேர்ந்த ட்டாட் பிஃபர் அளித்துள்ள தொலைபேசி பேட்டியில், பனிப் பிரதேசங்களில் உள்ள பனி மலைகள் உடைந்து கடலில் கலப்பதால் அடுத்த நூற்றாண்டில் கடல் மட்டம் உயரும் என்றாலும், பிற ஆய்வுகளில் குறிப்பிட்டது போல் 20 அடி வரை உயரும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட முடிவுகள் என்று கூறியுள்ளார்.

எனினும், வ‌ங்கதேச‌ம், சீனா, அமெரிக்காவின் நியூஆர்லியான்ஸ், ஆம்ஸ்டர்டாம், வெனீஸ் ஆகிய கடலோர நகரங்களில் கடல்மட்டம் உயர்வு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், இதனால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நன்றி வெப்துனியா .